கிராமங்களுக்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த 39 வாகன சேவை


கிராமங்களுக்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த 39 வாகன சேவை
x
தினத்தந்தி 8 July 2021 3:59 PM IST (Updated: 8 July 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

கிராமங்களுக்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த 39 வாகன சேவையை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றை முற்றிலும் தடுக்கும் வகையிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும் கர்ப்பிணி பெண்கள், பிரசவித்த பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் கருதி கிராமங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி அளிக்க வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 13 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 13 நடமாடும் மருத்துவ குழு மற்றும் 26 பள்ளி சிறார் நலத்திட்ட வாகனம் என மொத்தம் 39 வாகனங்கள் மூலம் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அந்த வாகனங்கள் இயக்க நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு 39 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் ஆர்.லட்சுமணன், சிவக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story