கோவில்பட்டியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
கோவில்பட்டியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கல்லூரணி ஜீவா நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் கருப்பசாமி (வயது 24). கூலி தொழிலாளி. இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிமுத்து (வயது25) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கருப்பசாமி வானரமுட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந் தாராம். அப்போது அங்கு வந்த இசக்கிமுத்து, கருப்பசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். காயம் அடைந்த கருப்பசாமி கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தார்.
Related Tags :
Next Story