தூத்துக்குடியில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்  கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க.  கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2021 7:25 PM IST (Updated: 8 July 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
பழங்குடியின மக்களுக்கு போராடிய ஸ்டேன்சுவாமிக்கு ஜெயிலில் சரிவர சிகிச்சை அளிக்காமல் மரணம் அடைய காரணமாக இருந்ததாக மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, சி.ஐ.டி.யு. பேச்சிமுத்து, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், ம.தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், மாநகர செயலாளர் முருகபூபதி, மகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story