களம்பூர் அருகே லாரி, பஸ் நேருக்குநேர் மோதல்; டிரைவர் பலி


களம்பூர் அருகே லாரி, பஸ் நேருக்குநேர் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 8 July 2021 7:32 PM IST (Updated: 8 July 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

களம்பூர் அருகே லாரி-பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் பயணம் செய்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ஆரணி

அரிசி மூட்டைகளை இறக்கி விட்டு..

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). இவர், அரசு நுகர்பொருள் கிடங்கில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை மண்ணை பகுதியில் உள்ள அரிசி குடோனில் இருந்து லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இறக்கினார். பின்னர் லாரியை திருவண்ணாமலையை நோக்கி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். 

பரிதாப சாவு

களம்பூரை அடுத்த கீழ்ப்பட்டு ஏரி பகுதி அருகில் சென்றபோது, அந்த வழியாக எதிரே திருவண்ணாமலையில் இருந்து வந்த ஒரு அரசு பஸ்சும், பூபாலன் ஓட்டிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் டிரைவர் பூபாலன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த 15 பயணிகளில் நார்த்தாம்பூண்டி பகுதியைச் சேர்ந்த சங்கர், முருகன், கிரண், பவித்ரா, ரமேஷ் ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு களம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story