நீலகிரியில் 1,200 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
நீலகிரியில் 1,200 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணிகள் சிலருக்கு தொற்று ஏற்பட்டது.
பின்னர் அவர்களுக்கு தங்காடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்தனர். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக முன்னுரிமை அடிப்படையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து வரும் கர்ப்பிணிகள் எத்தனை பேர் உள்ளனர்? என விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை கர்ப்பிணிகள் 1,200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story