தக்காளி விலை வீழ்ச்சி
வடகாடு மலைப்பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு, வண்டிப்பாதை, கோமாளிபட்டி, பால்கடை, கோட்டைவெளி, கோமாளிபட்டி ஆகிய மலைக்கிராமங்களில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தக்காளி அறுவடை பணி நடந்து வருகிறது. மேலும் அவை தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்காக வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக செடிகளில் தக்காளிகள் அழுகி விளைச்சல் குறைந்துள்ளது.
இதனிடையே தக்காளிகள் விலை வீழ்ச்சி அடைந்து தற்போது 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, ரூ.120-க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மணப்பாறை, தேனி, தேவாரம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை தருவர்.
ஆனால் தற்போது மணப்பாறை, தேனி, தேவாரம் ஆகிய இடங்களிலும் தக்காளி அறுவடை பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், அங்கேயே தக்காளியை கொள்முதல் செய்து விடுகின்றனர். விலை வீழ்ச்சிக்கு இதுவே காரணம் என்றனர்.
Related Tags :
Next Story