ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2021 10:10 PM IST (Updated: 8 July 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பணிமனையில் மத்திய அரசின் தனியார் மயக்கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ரெயில்வே தொழிலாளர்கள் பலர் மத்திய அரசை கண்டித்து ஒற்றுமை தினமாக இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ. ஜோலார்பேட்டை யூனியன் துணைத்தலைவர் நரசிம்மராவ் தலைமை தாங்கினார். உதவி கோட்ட செயலாளர்கள் மோகன், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ெரயில்வே யூனியன் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்ேகற்றோர் மத்திய அரசின் தனியார் மயக்கொள்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

அதில் விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள், ரெயில் நிலையங்கள், ரெயில்வே உற்பத்தி, பராமரிப்பு பணிகளை தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது. ரெயில்வே ஸ்டேடியம், ரெயில்வே குடியிருப்புகள், ரெயில்வே நிலையம், பணிமனை வளாகங்களை (ஆர்.எல்.டி.ஏ) மூலம் விற்கக் கூடாது என்றும், 41 பாதுகாப்பு உற்பத்தி பணி மனைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றி 76 ஆயிரம் மத்திய அரசு பாதுகாப்பு துறை ஊழியர்களின் நிரந்தர வேலையை பறிக்கக் கூடாது என்றும் அவசரக்கூட்டம் மூலம் பாதுகாப்புத்துறை ஊழியர்களின் வேலை நிறுத்த உரிமையை பறிக்கக் கூடாது என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட ெரயில்வே தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story