ரிவால்டோ யானை பராமரிப்பை வனத்துறை அதிகாரி ஆய்வு
கூடலூர் அருகே ரிவால்டோ யானை பராமரிப்பை வனத்துறை அதிகாரி ஆய்வு நடத்தினார்.
கூடலூர்,
கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த ரிவால்டோ யானையை வனத்துறையினர் பிடித்து மாவனல்லா சோதனைச்சாவடி அருகே மரக்கூண்டில் அடைத்தனர். தொடர்ந்து யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானையை மீண்டும் வனப்பகுதியில் விடுவதா அல்லது முதுமலை முகாமுக்கு கொண்டு செல்வதா என வனத்துறையினர் ஆலோசித்து வந்தனர்.
இந்த நிலையில் ரிவால்டோ யானை குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக 8 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி விரைவில் மசினகுடி பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது. இதற்கிடையில் தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மாலிக் சென்னையில் இருந்து நேற்று மசினகுடிக்கு வந்து ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து மரக்கூண்டில் அடைக்கப்பட்டு உள்ள ரிவால்டோ யானையை பார்வையிட்டு பராமரிப்பு பணியை ஆய்வு செய்தார். முன்னதாக அவரை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர்களிடம் ரிவால்டோ யானை குறித்து ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story