வால்பாறையில் சுகாதார பணிகள் தீவிரம்
வால்பாறையில் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வால்பாறை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி பொதுபோக்குவரத்து தொடங்கியதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வால்பாறை பகுதியில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், துப்புரவு அதிகாரி செல்வராஜ் தலைமையில் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ஏ.டி.எம். மையம், அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரி வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒலி பெருக்கி மூலம் வீதி, வீதியாக சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து வால்பாறை நகர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து, மாலை நேரங்களில் கொசு மருந்துகள் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story