நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வணிகத்துக்கு அனுமதி இல்லை. கலெக்டர் திட்டவட்டம்
நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வணிகத்துக்கு அனுமதி இல்லை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வணிகத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் மொத்த வணிகத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் வருகிற 12- ந் தேதிக்குள் அனுமதி தரவில்லை என்றால் மொத்த வணிகம் நிறுத்தப்படும் எனவும், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேதாஜி மார்க்கெட் அடைக்கப்பட்டு மொத்த காய்கறி வணிகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று முழுமையாக குறையவில்லை. இந்த நிலையில் மார்க்கெட்டில் மொத்த வணிகத்திற்கு அனுமதி அளித்தால் அங்கு அதிகப்படியான மக்கள் கூடவும் வாகன நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகும். இதன் மூலம் மீண்டும் தொற்று அதிகரிக்கும். எனவே மொத்த வணிகத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இனி வரும் நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு அனுமதி கொடுப்பது குறித்து முடிவு செய்யப்படும். மாற்று இடத்தில் பல்வேறு குறைகள் உள்ளதாக தெரிவித்தனர். அந்த குறைகள் சரி செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story