திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 96 பேர் பாதிப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 96 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 8 July 2021 10:51 PM IST (Updated: 8 July 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு 96 பேர் பாதிப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தற்போது  தொற்றின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. தினமும் சுமார் 125 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் பாதிவானது. 

நேற்று 96 பேர் மட்டுமே தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 1,234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 440 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 48 ஆயிரத்து 591 பேர் குணமடைந்து உள்ளனர். 615 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story