‘அனைத்து அதிகாரமும் பிரதமர் கையில் தான் இருக்கிறது’-கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து


‘அனைத்து அதிகாரமும் பிரதமர் கையில் தான் இருக்கிறது’-கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
x
தினத்தந்தி 8 July 2021 11:12 PM IST (Updated: 8 July 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அனைத்து அதிகாரமும் பிரதமர் கையில் தான் இருக்கிறது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

பெட்ரோல், டீசல் விலைஏற்றத்தை கண்டித்து சிவகங்கை மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு  கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஏலம்மாள் தலைமை தாங்கினார்.
மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகிேயார் முன்னிலை வகித்தனர். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆா்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ஏற்கனவே ஜி.எஸ்.டி.யில் பிடித்தம் செய்த மாநில அரசின் தொகையை வழங்க வேண்டும். பெட்ரோல்,டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர எல்லோருடைய கருத்தையும் மதித்து ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் நடந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். மத்திய மந்திரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை, அனைத்து அதிகாரமும் பிரதமர் கையிலேயே தான் உள்ளது.
மத்திய மந்திரிகளை பலிகடாவாக்குவதுதான் இந்த அரசின் வழக்கம். மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் மாநில அரசின் பக்கமே இருக்கும். ஒளிப்பதிவு சட்ட மசோதா குறித்த கேள்விக்கு அந்த குழுவில் தானும் உள்ளதாகவும் அந்த சட்டத்தில் வில்லங்கம் உள்ளது. ஏற்கனவே சென்சார் செய்த படத்தை மீண்டும் மத்திய அரசு சென்சார் செய்ய வழிவகை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story