ஆடு திருடிய 2 பேர் கைது


ஆடு திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2021 11:15 PM IST (Updated: 8 July 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டி பகுதியில் புழுதிபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதன் வழியே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஒரு ஆட்டுக்குட்டியுடன் சென்று உள்ளனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். உடனே அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், மோட்டார்சைக்கிளில் திருமலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகேசன் (வயது 30), கவுனார்பட்டியைச் சேர்ந்த வீரையா மகன் மணிகண்டன் (22) ஆகியோரும், தப்பி ஓடிய திருமலைக்குடியை சேர்ந்த சிவா என்பவரும் சென்றது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த மன்சூர்அலி என்பவரது வீட்டில் புகுந்து ஆட்டை திருடி கொண்டு வந்த போது போலீசில் சிக்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story