விஷம் குடித்த முதியவர் சாவு


விஷம் குடித்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 8 July 2021 11:20 PM IST (Updated: 8 July 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தேனி: 

தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் சின்னாத்தேவர் (வயது 80). இவருடைய மனைவி ஒச்சம்மாள். இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.

 இந்நிலையில், கடந்த மாதம் 22-ந்தேதி சின்னாத்தேவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை அவருடைய குடும்பத்தினர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 


அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மகன் ஜெயபாண்டி அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story