கீழடியில் கண்ணாடி, சுடுமண் பாசி மணிகள் கண்டெடுப்பு
கீழடியில் நடந்த அகழாய்வில் சுடுமண், கண்ணாடி பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டன.
திருப்புவனம்,
கீழடியில் நடந்த அகழாய்வில் சுடுமண், கண்ணாடி பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வு
கீழடியில் ஏற்கனவே சேதமுற்ற நிலையில் சிறிய, பெரிய பானைகள், பழங்கால பாசி மணிகள், தாயக்கட்டைகள், சிறுவர்கள் விளையாடும் சில்லு வட்டுக்கள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம், மண்ணாலான விவசாய கருவிகள், மண் சட்டிகள் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் கொந்தகையில் முதுமக்கள் தாழிகள், மனித முழு உருவ எலும்புக்கூடுகள், மனித மண்டை ஓடு, தாடை எலும்பு, விலா எலும்பு, கை கால் எலும்பு, இரும்பாலான வாள், மண் சட்டிகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.
பாசி மணிகள் கண்டெடுப்பு
கீழடியில் தொடர்ந்து பணிகள் நடைபெற்ற போது ஊதா, பச்சை கலரில் பழங்கால கண்ணாடி பாசி மணிகளும், மேலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாசிமணிகளும் கண்டறியப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெறும்போது மேலும் பல்வேறு அரிய பழங்கால பொருட்கள் கிடைக்கலாம் என தெரிகிறது.திருப்புவனம்,ஜூலை.9-
கீழடியில் நடந்த அகழாய்வில் சுடுமண், கண்ணாடி பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டன.
Related Tags :
Next Story