நீர்நிலைகளில் மின்கம்பம் அமைக்கும் காற்றாலை நிறுவனம் மீது நடவடிக்கை
தாராபுரம் அருகே நீர்நிலைகளில் மின்கம்பம் அமைக்கும் தனியார் காற்றாலை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் எடைக்கல்பாடி விவசாயிகள் மனுகொடுத்தனர்.
தாராபுரம்
தாராபுரம் அருகே நீர்நிலைகளில் மின்கம்பம் அமைக்கும் தனியார் காற்றாலை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் எடைக்கல்பாடி விவசாயிகள் மனுகொடுத்தனர்.
விவசாயிகள் மனு
மூலனூர் எடைக்கல்பாடி பகுதி விவசாயிகள், தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணவேணியிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மூலனூர் எடைக்கல்பாடி பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் நீர் நிலைகளை ஆக்கிரமித்து ஊராட்சியின் அனுமதியின்றி மின் கம்பங்களை அமைத்து வருகிறது. வண்டிப்பாதை பகுதியில் மின் கம்பங்கள் அமைப்பதற்காக பாதையின் இருபுறமும் உள்ள மரங்கள் அனைத்தையும் பொக்லைன் எந்திரங்களை கொண்டு அகற்றியுள்ளனர்.
இதே வழிப்பாதையில் கருப்பண்ணசுவாமி கோவில் மற்றும் செல்லப்பங் காடு குளத்திற்கு செல்லும் நீர் வழி தடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து உயர்மின் அழுத்த கம்பங்களை கொண்டு செல்வதற்கான வழி பாதையாக மாற்றி மின் கம்பங்களை எடுத்துச் செல்கின்றனர்.
மாற்றுப்பாதை
மேலும்கோவிலுக்கு செல்லும் பாதையில் இருபுறமும் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்ததால் பாதையின் அளவு குறுகலாக மாறிவிட்டது. மேலும் இந்த குறுகலான பாதையிலேயே மின் கம்பங்கள் அமைத்தால் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை இல்லாமல் போகும்.
இதனால் மின்கம்பங்கள் நடாமல் சாலை ஓரங்களில் புதை வழி கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். மேலும் கோவிலுக்கு செல்லும் பாதை நீர்நிலைகள் உள்ள இடங்கள், விவசாயிகள் விவசாயத்திற்காக பயன்படுத்தும் பாதை ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு காற்றாலை நிறுவனத்தினர் மாற்று பாதையில் மின்கம்பங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அப்பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story