கரூரில் உழவர்சந்தை திறப்பு


கரூரில் உழவர்சந்தை திறப்பு
x
தினத்தந்தி 9 July 2021 12:21 AM IST (Updated: 9 July 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் உழவர்சந்தை திறக்கப்பட்டது

கரூர்
கொரோனா தொற்றின் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கரூர் மாவட்டத்தில் கரூர், பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், குளித்தலை, வெங்கமேடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த உழவர் சந்தைகள் நேற்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றுமுதல் கரூர் உழவர்சந்தை திறக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

Next Story