திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது

திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2021 12:23 AM IST (Updated: 9 July 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செம்பட்டு, 
திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மூன்றாவது சோதனைச்சாவடியில் ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக புதுக்கோட்டை மாவட்டம் நோக்கி சென்ற ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது லாரியில் தலா 50 கிலோ எடையுள்ள 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. இதைத்தொடர்ந்து லாரியையும், 2½ டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

2 பேர் கைது

மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிந்து, திருச்சி தேவதானம் இ.பி.ரோடு கோனார் தெருவை சேர்ந்த குருநாதன் (வயது 32), திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஆர்.ராதா காலனிய சேர்ந்த ஜான் (40) ஆகிய இருவரையும் கைது செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

Next Story