காட்டுப்புத்தூர் அருகே வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி


காட்டுப்புத்தூர் அருகே வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 9 July 2021 12:23 AM IST (Updated: 9 July 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்புத்தூர் அருகே வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலியானான்.

காட்டுப்புத்தூர், 

காட்டுப்புத்தூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் தீபக் (வயது 17). இவர் தவிட்டு பாளையத்தில் உள்ள வாய்க்காலில் நேற்று மாலை தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென தண்ணீரில் தீபக் மூழ்கினான். 

இதைப்பார்த்த சக நண்பர்கள், அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களிடம் தீபக் மூழ்கிவிட்டதை கூறியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீபக்கை மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

இதுபற்றி தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story