காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கரூர்
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வால் மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் நேற்று பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய நகர தலைவர் பெரியசாமி தலைமையில் கரூர்-கோவை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு வடக்கு நகர தலைவர் ஸ்டீபன் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. லைட்ஹவுஸ் கார்னர், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும், கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
Related Tags :
Next Story