திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 603 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறந்தனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வத்தலக்குண்டுவை சேர்ந்த 75 வயது முதியவர் மதுரை அரசு மருத்துவமனையிலும், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 76 வயது மூதாட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.ஆனால் அந்த 2 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 605 ஆனது. இதற்கிடையே நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேநேரம் 44 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story