ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பு
திருப்பூர் மாநகரம் லட்சுமிநகர் பகுதியில் பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
அதிகளவு வாகன போக்குவரத்தும் அந்த பகுதியில் இருக்கும். இந்த நிலையில் லட்சுமிநகர் பகுதியில் ஏராளமான கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இடித்து அகற்றம்
அதன்பேரில் நேற்று லட்சுமிநகர், முல்லைநகர் பகுதிகளில் மாநகராட்சி 2வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் மற்றும் உதவி பொறியாளர் ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும் பல கடைகளில் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story