மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு + "||" + Flush the jewelry to the grandmother

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு
திருக்கோவிலூர் அருகே மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே டி.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் மனைவி சவரிஅம்மாள் (வயது 80). இவர் நேற்று காலை அதே ஊரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சவரிஅம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தார். இதில் திடுக்கிட்ட அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர் நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்றார். 
இது குறித்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி மடிக்கணினி, ரூ.15 ஆயிரம் பறிப்பு
தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி மடிக்கணினி, ரூ.15 ஆயிரம் பறிப்பு
2. பெண்ணிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
3. திருமயம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருமயம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
5. தங்கச்சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு