கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல், ஜூலை.9-
எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை துணை தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது. ரெயில்வே மைதானம், குடியிருப்புகள், ரெயில் நிலைய பணிமனை வளாகம் ஆகியவற்றை ஆர்.எல்.டி.ஏ. மூலம் விற்பனை செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க உதவி செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் மூர்த்தி உள்பட ரெயில்வே ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் பழனி ரெயில்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பழனி கிளை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கில்பர்ட், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் தனியார்மயத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் டி.ஆர்.இ.யூ. சங்கம் சார்பில் பழனி ரெயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மதுரை கோட்ட உதவி தலைவர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிளை செயலாளர் காட்டுராஜா, பழனி கிளை உதவி செயலாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ரெயில்வே பணியாளர்களுக்கு பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும், ரெயில்வே தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story