தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2021 12:46 AM IST (Updated: 9 July 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது இருசக்கர வாகனம் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் பழ.அப்பாசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story