கற்குடி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை


கற்குடி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 July 2021 1:12 AM IST (Updated: 9 July 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே கற்குடி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ளது கட்டளை குடியிருப்பு கிராமம். இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இந்த நிதியாண்டில் 197 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள், அனைவருக்கும் பாரபட்சமின்றி குடிநீர் வழங்கக்கோரி கற்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதாக உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Next Story