தபால் ஊழியர்கள் போராட்டம்
பாளையங்கோட்டையில் தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-சி தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் பாளையங்கோட்டை தபால் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். அஞ்சல் 3-ம் பிரிவு கோட்ட செயலாளர் ஜேக்கப் ராஜ் தலைமை தாங்கினார். அஞ்சல் 4-ம் பிரிவு கோட்ட செயலாளர் புஷ்பாகரன் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மத்திய அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த ஊழியர்களின் போராட்டங்களுக்கு எதிராக கொண்டு வரும் அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். போராடும் பாதுகாப்புத்துறை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story