பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்
பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்பட்டது.
அன்னவாசல்
அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆர்சனிக் ஆல்பம் என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயுஷ் மருத்துவர் சுயமரியாதை கலந்து கொண்டு செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேருக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 மாத்திரைகள், 5 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 3 மாத்திரைகள், 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 மாத்திரைகள் நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலையில் உட்கொள்ள வேண்டும். இம் மாத்திரைகளை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த மாத்திரை உட்கொண்ட 3 வாரங்களுக்கு பிறகு இதேபோல தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியின்போது மருத்துவர்கள் சவுந்தர்யா, பல் மருத்துவர் நிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story