மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் விரைவு மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.
அரியலூர்:
பாலியல் பலாத்காரம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 48 வயது விவசாய கூலி தொழிலாளி, கடந்த 2018-ம் ஆண்டு தனது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள்.
அங்கு அந்த சிறுமியை பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, அவளை, தந்தை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
தீர்ப்பு
இதுகுறித்த புகாரின்பேரில் 9.3.2018 அன்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, அரியலூர் விரைவு மகிளா கோர்ட்டில் நடந்தது. சிறுமியின் தரப்பில் அரசு வக்கீல் ராமகோவிந்தராசு ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார்.
ரூ.7 லட்சம் இழப்பீடு
அவர் தனது தீர்ப்பில், சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறுமியின் தந்தையை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story