சாத்தூர் - இருக்கன்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம்
சாத்தூர் - இருக்கன்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
சாத்தூர்,
சாத்தூர் - இருக்கன்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ரெயில்வே மேம்பாலம்
இருக்கன்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் அமைய உள்ள ரெயில்வே மேம்பால திட்டத்திற்கான பணிகள் நடைபெறும் இடத்தை திடீரென ஆய்வு செய்தார். பின்னர் பாலப்பணிகள் குறித்து ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எனவே ெரயில்வே மேம்பாலத்தினை மாற்றுப்பாதையில் அமைத்து தரும்படி வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாற்றுப்பாதைக்கான வழிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
உறுதி
மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்பாலம் கட்டும் பணி அமையும் என அவர் உறுதியளித்தார்.
ஆய்வின் போது சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா, தாசில்தார் வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், ெரயில்வே அலுவலர்கள், அரசு அதிகாரிகள், சாத்தூர் வர்த்தக சங்க சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story