அரசு பள்ளி ஆசிரியர் கொலையில் 3 பேர் கைது; ஓரினசேர்க்கையில் ஈடுபட வரவழைத்து தீர்த்துக்கட்டினர்


அரசு பள்ளி ஆசிரியர் கொலையில் 3 பேர் கைது; ஓரினசேர்க்கையில் ஈடுபட வரவழைத்து தீர்த்துக்கட்டினர்
x
தினத்தந்தி 9 July 2021 2:22 AM IST (Updated: 9 July 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

கவுரிபித்தனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஓரினசேர்க்கையில் ஈடுபட வரவழைத்து பணம் பறித்து அவரை தீர்த்துக்கட்டியது அம்பலமானது.

சிக்பள்ளாப்பூர்: கவுரிபித்தனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஓரினசேர்க்கையில் ஈடுபட வரவழைத்து பணம் பறித்து அவரை தீர்த்துக்கட்டியது அம்பலமானது. 

அரசு பள்ளி ஆசிரியர்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் டவுனை சேர்ந்தவர் விஸ்வநாத் (வயது 42). இவர் கவுரிபித்தனூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி விஸ்வநாத் தான் வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, விஸ்வநாத்தை காணவில்லை என கவுரிபித்தனூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

3 பேர் கைது

இந்த நிலையில் கவுரிபித்தனூர் அருகே கோரிபித்தனூர் பைபாஸ் சாலையில் உள்ள நர்சிங் கல்லூரியின் பின்புறம் முட்புதரில் விஸ்வநாத் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து விஸ்வநாத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கவுரிபித்தனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுரிபித்தனூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், மனு, மஞ்சு ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. 

ஓரினச்சேர்க்கை

அதாவது, கொலையான விஸ்வநாத்துக்கும், கவுரிபித்தனூரை சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக ஓரினச்சேர்க்கை தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். 

அதுபோல் கடந்த 4-ந்தேதியும் ஆகாஷ், செல்போனில் தொடர்பு கொண்டு விஸ்வநாத்தை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம் என அழைத்துள்ளார். அதனால் அவரும் புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் ஆகாஷ், தனது நண்பர்களான மஞ்சு, ஸ்ரீகாந்த், விஸ்வநாத்துடன் வேலை செய்து வந்த மனு ஆகியோருடன் அங்கிருந்துள்ளார். அவர்கள் விஸ்வநாத்தை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் இருந்துள்ளனர். இதை அறியாத விஸ்வநாத் அங்கு சென்றுள்ளார். 

பணம் பறித்து தீர்த்துக்கட்டினர்

அப்போது 4 பேரும் சேர்ந்து விஸ்வநாத்தை மிரட்டி அவரது செல்போனில் இருந்து ஆன்-லைன் மூலம் ரூ.31 ஆயிரத்தை வேறு வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வநாத் அவர்களுடன் தகராறு செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்துவைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் விஸ்வநாத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகியுள்ளார். இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆகாஷ் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

Next Story