தேவேகவுடா குடும்பத்தை யாராலும் பிரிக்க முடியாது; எச்.டி.ரேவண்ணா ஆவேசம்


தேவேகவுடா குடும்பத்தை யாராலும் பிரிக்க முடியாது; எச்.டி.ரேவண்ணா ஆவேசம்
x
தினத்தந்தி 9 July 2021 2:59 AM IST (Updated: 9 July 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

தேவேகவுடா குடும்பத்தை யாராலும் பிரிக்க முடியாது. பிரஜ்வெல்லிடம் இருந்து சுமலதா தான் பாடம் கற்க வேண்டும் என்று எச்.டி.ரேவண்ணா ஆவேசமாக கூறினார்.

ஹாசன்: தேவேகவுடா குடும்பத்தை யாராலும் பிரிக்க முடியாது. பிரஜ்வெல்லிடம் இருந்து சுமலதா தான் பாடம் கற்க வேண்டும் என்று எச்.டி.ரேவண்ணா ஆவேசமாக கூறினார். 

குமாரசாமி-சுமலதா மோதல்

மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் அதனை சுற்றி நடைபெறும் கல்குவாரி தொழில் குறித்து நடிகை சுமலதா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கல்குவாரி தொழில் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, சுமலதா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. குமாரசாமி தனது அண்ணன் மகன் பிரஜ்வெல் ரேவண்ணா எம்.பி.யிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சுமலதா கூறினார். 

குமாரசாமி-சுமலதா மோதல் குறித்து நேற்று முன்னாள் மந்திரியும், தேவேகவுடாவின் மூத்த மகனுமான எச்.டி.ரேவண்ணா பதில் அளித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

யாராலும் பிரிக்க முடியாது

குமாரசாமிக்கும், சுமலதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதல் எப்போதும் முடிவடையும் என்பது தெரியவில்லை. சுமலதா, எங்கள் குடும்பத்தை விமர்சனம் செய்துள்ளார். பிரஜ்வெல்லிடம் இருந்து குமாரசாமி பாடம் கற்க வேண்டும் என்று சுமலதா கூறியுள்ளார். சுமலதா வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இவ்வாறு பேசுவதன் மூலம் எங்கள் குடும்பத்தில் விரிசல் ஏற்படும் என்று சுமலதா எண்ணக்கூடாது. எங்கள் குடும்பத்தை பிரிக்கும் முயற்சியில் சுமலதா ஈடுபட்டுள்ளார். 

தேவேகவுடா குடும்பத்ைத யாராலும் பிரிக்க முடியாது. சுமலதா கருத்து குறித்து அறிந்ததும் பிரஜ்ெவல், என்னை தொடர்பு கொண்டு ஆதங்கத்தை வெளிபடுத்தினார். 

பிரஜ்வெல்லிடம்...

குமாரசாமிக்கு இரட்டை வேடம் போட தெரியாது. அவரது ஆதரவாளர்கள் கல்குவாரி நடத்துகிறார்கள் என்றால், அதுகுறித்து அரசு விசாரணை நடத்த உத்தரவிடட்டும். அதனை எதிர்கொள்ள குமாரசாமி தாயராக உள்ளார். நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ் ஆகியோர் இறந்தபோது குமாரசாமி எப்படி செயல்பட்டார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது எவ்வாறு செயல்பட்டார் என்பதும் மக்களுக்கு தெரியும். தேவேகவுடா பிரதமராகவும், குமாரசாமி முதல்-மந்திரியாகவும் இருந்துள்ளனர். 

அவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று பிரஜ்வெல்லிடம் சுமலதா தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். குமாரசாமி எப்போதும் வறுமையில் உள்ள மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து வருகிறார். இதனை சுமலதா புரிந்துகொள்ள வேண்டும். தேவேகவுடா குடும்பத்தை உடைக்கும் முயற்சியில் சுமலதா ஈடுபடக்கூடாது. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story