சேலம் மாவட்டத்தில் 205 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று 205 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 205 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
குறைந்து வருகிறது
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 214 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 205 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.
அதன்படி மாநகராட்சி பகுதியில் 21 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சங்ககிரியில் ஒருவர், மேச்சேரியில் 2 பேர், மகுடஞ்சாவடியில் 3 பேர், காடையாம்பட்டியில் 4 பேர், கொளத்தூர், கொங்கணாபுரத்தில் தலா 5 பேர், நங்கவள்ளியில் 6 பேர், வீரபாண்டியில் 7 பேர், எடப்பாடியில் 8 பேர், தாரமங்கலத்தில் 11 பேர், சேலம் ஒன்றிய பகுதிகளில் 13 பேர், ஓமலூரில் 16 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிகிச்சை
பெத்தநாயக்கன்பாளையத்தில் 10 பேர், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த மொத்தம் 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்து 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story