உலமாக்கள் மோட்டார் சைக்கிள் வாங்க மானியம்-கலெக்டர் கார்மேகம் தகவல்
உலமாக்கள் மோட்டார் சைக்கிள் வாங்க மானியம் அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வக்பு வாரியங்களில் பணியாற்றும் உலமாக்கள் மோட்டார் சைக்கிள் வாங்க ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீத தொகை, இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்பட உள்ளது. மானியம் பெற 18 வயதிற்கு மேல் 40 வயதிற்குள்ளும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உலமாக்களாக பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, வருமான சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story