விபத்துகள் ஏற்படாமல் இருக்க ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும்-ஐ.ஜி. சுமித்தரன் அறிவுரை


விபத்துகள் ஏற்படாமல் இருக்க ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும்-ஐ.ஜி. சுமித்தரன் அறிவுரை
x
தினத்தந்தி 9 July 2021 3:57 AM IST (Updated: 9 July 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

விபத்துகள் ஏற்படாமல் இருக்க ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும் என்று ஐ.ஜி.சுமித்தரன் தெரிவித்தார்.

சூரமங்கலம்:
விபத்துகள் ஏற்படாமல் இருக்க ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும் என்று ஐ.ஜி.சுமித்தரன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. சுமித்தரன் மற்றும் டி.ஐ.ஜி. ஜெயகவுரி ஆகியோர் சேலம் ரெயில்வே போலீசாருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் குற்றங்கள் ஏற்படாதவாறு விழிப்பாக செயல்படுவது, குற்றங்களை தடுப்பது, ஏற்கனவே நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிவது குறித்து விளக்கி கூறினர். மேலும் ரெயில்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்தும் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு
இதையடுத்து ஐ.ஜி. சுமித்தரன் பேசுகையில், ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது மட்டுமின்றி, விபத்துகள் ஏற்படாமல் இருக்க பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மேலும் விபத்துகள் ஏற்படாமல் இருக்க ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும். ரெயில் தண்டவாள பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் தண்டவாளங்களை கடப்பது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில், ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story