தமிழகத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி


தமிழகத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 July 2021 9:34 AM IST (Updated: 9 July 2021 9:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. சென்னை மாவட்டம் பூந்தமல்லி, மாங்காடு சுற்றுவட்டார பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் காலவாசல், பைபாஸ் ரோடு, ஆரப்பாளையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை வெளுத்துவாங்கியது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் கனமழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் பகுதியில் கனமழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பல மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. திருவள்ளூர், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story