மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் ஆசிரியர்கள்
அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு 10 கிலோ அரிசியை ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.
நாகூர்,
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளின் மோகத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் நாகையை அடுத்த நாகூரில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, இங்கு பணி புரியும் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் 10 கிலோ அரிசி வழங்கி வருகின்றனர்.
நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் இதுவரை புதிதாக 6-ம் வகுப்பில் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கி உள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் சிரமப்படும் ஏழை குடும்பங்களுக்கு இ்ந்த அரிசி பயனுள்ளதாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு சொந்த செலவில் அரிசி மூட்டைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வரும் நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story