மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம்
மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயமாகி விட்டார்.
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர்குப்பத்தை சேர்ந்தவர் முத்து. இவருக்கு சொந்தமான விசைப்படகில் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரைச் சேர்ந்த ஆனந்த் (வயது32), முருகவேல், வீரமுத்து, செல்வம், தர்மராஜ் உள்ளிட்ட 11 மீனவர்கள் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 2-ந் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடந்த 5-ந்தேதி சென்னை அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது பலத்த சூறைகாற்று வீசியது. இதில் மீனவர் ஆனந்த் படகில் இருந்து தவறி விழுந்து மாயமாகி விட்டார்.
இதையடுத்து அவரை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து விசைப்படகின் உரிமையாளர் முத்து நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்திற்கு நேற்று தகவல் கொடுத்தார். இதுகுறித்து நாகை கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story