தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில்  உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 July 2021 5:43 PM IST (Updated: 9 July 2021 5:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பிரசாரம்
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சுகாதார பணிகள் இணை இயக்குனர் முருகவேல், குடும்ப நலம் துணை இயக்குனர் பொன் இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கொரோனா பேரிடர் காலத்திலும் குடும்பநலம் மற்றும் தாய் சேய் நலசேவைகளை தங்கு தடையின்றி வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சுகாதாரதுறை துணை இயக்குனர்கள் சுந்தரலிங்கம் (காசநோய்), யமுனா (தொழுநோய்), ஆறுமுகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், சமூக ஆர்வலர் ஜெயபால் ஆலிவர், மாவட்ட கலெக்டர் அலுவலக மாவட்ட விரிவாக்க கல்வியாளர் செந்தில் குமார், குடும்பநலச் செயலக மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மோகனரங்கன், புள்ளி விவர உதவியாளர் பிரபாகரன், இளநிலை நிர்வாக அலுவலர் மெல்வின் விக்டர் மற்றும் வட்டார சுகாதார புள்ளியலர்கள், மாநகர சுகாதாரச் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைத்து அலுவலர்களும் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்றனர்.


Next Story