மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2021 6:07 PM IST (Updated: 9 July 2021 6:07 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வெளிப்பாளையம்,

பழங்குடி மக்களின் போராளி ஸ்டான்சாமி சாவுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிசார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் பகு தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் மணி, திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தார். நாகை மாலி எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துவளவன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் வேணு முன்னிலை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிரமணியன் பேசினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் தமிழ்பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் அப்துல்அஜிஸ், கிருஷ்ணன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் செல்லையன், கடலோர பிரதேசக்குழு ஒன்றிய குழு உறுப்பினர் ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி செயலாளர் கண்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் பேசினார். விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் வெற்றியழகன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கராசு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வெண்சங்கு மற்றும் வெற்றிச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story