சிலிண்டர், ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர், ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், நிர்வாகிகள் கிரிஜா, நவாஸ், மூங்கில் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் மூவலூர் ரங்கநாதன், நவாஜ்தின், கமலநாதன், கிரிஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கே. பி. எஸ்.எம். கனிவண்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லட்சுமணன், வட்டார தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் காலி சிலிண்டர் மற்றும் ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்திருந்தனா். இதில் காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் வி.ஆர்.ஏ அன்பு, துரைராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
குத்தாலம் தாசில்தார் அலுவலகம் அருகில் குத்தாலம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் சூர்யா தலைமையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட துணைத் தலைவர் சரத் சந்திரன், வட்டார தலைவர்கள் முகமது ரியாத், செந்தில், நகர செயலாளர் செந்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் ஜம்பு கென்னடி, மிலிட்டரி செல்வராஜ், நவாஸ், ஊடகப் பிரிவு பொறுப்பாளர் வக்கீல் ராம்குமார், இளைஞர் காங்கிரஸ் சதீஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story