குடிசை வீடு எரிந்து கணவன்-மனைவி படுகாயம்


குடிசை வீடு எரிந்து கணவன்-மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 9 July 2021 7:32 PM IST (Updated: 9 July 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் கணவன்-மனைவி படுகாயமடைந்தனர்.

தூசி,

வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த சோழவரம் ரைஸ் மில் தெருவில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு காலியிடத்தில் குடிசை கட்டி வசித்து வருபவர் மணி (வயது 55), மரம் வெட்டும் தொழிலாளி. இவரின் மனைவி மஞ்சுளா. இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தனர். படுக்கைக்கு அருகில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

அப்போது சிம்னி விளக்கை எலி தள்ளிவிட்டதாக தெரிகிறது. அதில் குடிசை வீடு எரிந்து இருவருக்கும் தீ காயம் ஏற்பட்டது. அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சென்று காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணி கொடுத்த புகார் மீது தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story