போளூர் அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்து 2 பேர் பலி
போளூர் அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
போளூர்,
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கீழ்கரிக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், விவசாயி. இவரின் நிலத்தில் புதிதாகக் கிணறு தோண்டும் பணியில் 3 பேர் ஈடுபட்டு வந்தனர்.
போளூரை அடுத்த பெலாசூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரவீந்தர் (வயது 31), கீழ்கரிக்காத்தூரை சேர்ந்த வேணுசெட்டியாரின் மகன்களான அர்ஜூனன் (48), மாயக்கண்ணன் (38) ஆகியோர் நேற்று காலை 9.45 மணியளவில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வெடி வைத்துள்ளனர். வெடியின் அதிர்வால் 36 அடி உயரத்தில் இருந்து மண் சரிந்து கிணற்றுள் விழுந்தது. கிணற்றுக் குழியில் நின்றிருந்த 3 பேரும் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போளூரில் இருந்து தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மண்ணில் புதைந்தவர்களை மீட்டனர். அதில் ரவீந்தர், அர்ஜுனன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த மாயக்கண்ணனை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின்ேபரில் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மண் சரிந்து விழுந்து 2 பேர் பலியானதால் இரு கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். அதில் பலியான ரவீந்தரின் மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
Related Tags :
Next Story