வேடசந்தூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு


வேடசந்தூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 July 2021 7:52 PM IST (Updated: 9 July 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடுபோனது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் குட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சக்திவேலுக்கு வேடசந்தூரில் சொந்தமாக தோட்டத்து வீடு உள்ளது. இங்கு அவ்வப்போது அவர் வந்து செல்வது வழக்கம். 
இந்தநிலையில் நேற்று காலை அவரது தோட்டத்து வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செல்போன் மூலம் சக்திவேலை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று காலை சக்திவேல் தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் 4 பவுன் நகை திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 
இதுகுறித்து அவர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story