8 பேருக்கு கொரோனா தொற்று
8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 785 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 12 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 303 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 143 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 339 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவ தொடங்கிய பின்னர் முதல் முறையாக தற்போது ஒற்றை இலக்க எண்ணில் நோய்த்தொற்று பாதிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story