காரில் இறந்து கிடந்தவரால் பரபரப்பு


காரில் இறந்து கிடந்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 July 2021 9:13 PM IST (Updated: 9 July 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

காரில் இறந்து கிடந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர் முருகாண்டி மகன் பத்மநாதன் (வயது43). சொந்தமாக தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் தனது காரில் பாரதிநகரில் உள்ள நண்பரை பார்க்க செல்வதாககூறி சென்றாராம். இந்நிலையில் மறுநாள் காலை பாரதிநகர் பகுதியில் காரில் மயக்கமடைந்த நிலையில் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரின் தம்பி ராஜேஷ் கண்ணன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்ததும் காரின் கதவை உடைத்து உள்ளே இருந்த பத்மநாதனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story