திண்டுக்கல்லில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2021 9:30 PM IST (Updated: 9 July 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:
பொது காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், திண்டுக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகராட்சி சாலையில் உள்ள காப்பீட்டு நிறுவன அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொது காப்பீட்டு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல பொதுச்செயலாளர் ரமேஷ் கண்டன உரையாற்றினார். 
ஆர்ப்பாட்டத்தில், யுனைடெட் இந்தியா உள்பட பொது காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு பரிந்துரை செய்த மத்திய அரசை கண்டித்தும், அரசு காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story