திண்டுக்கல் அருகே கொரோனாவுக்கு மூதாட்டி பலி
திண்டுக்கல் அருகே கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 606 ஆனது. இதற்கிடையே நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்து 822 ஆக உயர்ந்தது. அதேநேரம் 35 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story