பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2021 9:54 PM IST (Updated: 9 July 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தர்மபுரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் நகர தலைவர் தகடூர் வேணுகோபால், கட்சி நிர்வாகிகள் வேடியப்பன், ஜெய்சங்கர், முபாரக், மணி, ஹரிகிருஷ்ணன், தங்கவேல், ரமேஷ், மகேந்திரன், ராஜா, பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரூர்-காரிமங்கலம்
இதேபோன்று அரூர் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அரூர் ராஜீவ் காந்தி சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் வேடியப்பன், நிர்வாகிகள் வைரவன், ஆறுமுகம், மோகன், சுகுமார், மார்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
காரிமங்கலம் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அகில இந்திய குழு உறுப்பினர் சித்தையன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள். அருன்குமார், மேகநாதன், பச்சையப்பன், ஜெயபால், சம்பத், சிவன் உட்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
நல்லம்பள்ளி
இதேபோன்று நல்லம்பள்ளியில் வட்டார தலைவர் காமராஜ் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டார தலைவர் பூபதி ராஜா தலைமையிலும், பொம்மிடியில் வட்டார தலைவர் வேலன் தலைமையிலும், செட்டிகரையில் வட்டார தலைவர் மணிகண்டன் தலைமையிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

Next Story