ரூ.1 கோடியில் புதிய மின்மயானம்


ரூ.1 கோடியில் புதிய மின்மயானம்
x
தினத்தந்தி 9 July 2021 9:58 PM IST (Updated: 9 July 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் ரூ.1 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க பூமி பூஜை நடந்தது.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் வடக்கு பகுதியில் பொது மயானம் உள்ளது. 

இந்த மயானத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று அங்கு ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் மின்மயானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்மயானம் அமைக்க பூமிபூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 


இதில் அதி நவீன தகனமேடை, நிர்வாக அலுவலகம், ஜெனரேட்டர் அறை, வாகன நிறுத்துமிடம், பொதுமக்கள் அமரும் இடம், காம்பவுண்டு சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 


Next Story